பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: முதல் சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா
முதல் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா , டேவிட் நவராவுடன் (செக்குடியரசு) ஆகியோர் மோதினர்;
பிராக்,
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் முதல் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா , டேவிட் நவராவுடன் (செக்குடியரசு) ஆகியோர் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலில் டேவிட் நவராவுடன் டிரா கண்டார்.
மற்றொரு இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் 76-வது நகர்த்தலில் நுயென் தாய் டாய் வானுடன் (செக்குடியரசு) டிரா செய்தார்.