பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

பிரக்ஞானந்தா இந்த தொடரில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.;

Update:2025-03-02 00:41 IST

பிராக்,

பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 29-வது நகர்த்தலில் நுயென் தாய் டாய் வானை (செக்குடியரசு) தோற்கடித்தார். முதல் இரு ஆட்டங்களில் டிரா கண்டு இருந்த பிரக்ஞானந்தா இந்த தொடரில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 

Tags:    

மேலும் செய்திகள்