உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்று அசத்தல்
இவர் இறுதிப்போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்ஸெரெமெட்டா உடன் மோதினார்.;
image courtesy:PTI
லிவர்பூல்,
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, போலந்தின் ஜூலியா ஸ்ஸெரெமெட்டாவை எதிர்த்துப் போட்டியிட்டார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட ஜாஸ்மின் 4-1 என்ற கணக்கில் ஜூலியா ஸ்ஸெரெமெட்டாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
இதில் மற்ற இந்திய வீராங்கனைகளான நுபுர் ஷியோரன் (+81 கிலோ) வெள்ளிப் பதக்கமும், பூஜா ராணி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.