உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா தங்கம் வென்று அசத்தல்
இந்திய வீராங்கனைகள் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் வென்றனர்.;
image courtesy:instagram/menakshi3090
லிவர்பூல்,
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான கஜகஸ்தானின் நாசிம் கிஜாய்பேவுடன் மோதினார். இதில் 4-1 என்ற கணக்கில் மீனாட்சி வெற்றிப் பெற்று தங்க பதக்கம் வென்று அசத்தினார்.
இந்த தொடரில் இந்திய தரப்பில் வீரர்கள் யாரும் பதக்கம் வெல்லாத நிலையில் வீராங்கனைகள் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை அறுவடை செய்து தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.