உலகக் கோப்பை செஸ்: குகேஷ் - கேசிபேக் நோகர்பெக் ஆட்டம் டிரா
உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
கோவா,
உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து நடந்து வருகிறது. இந்த போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நேற்று 2-வது சுற்றின் முதல் ஆட்டங்கள் நடந்தன.
இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராத்திக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் 12 வயதான ஒரோ பாஸ்டினோ 28-வது காய் நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். இன்று மீண்டும் மோத உள்ளனர்.
உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், கேசிபேக் நோகர்பெக் (கஜகஸ்தான்) இடையிலான ஆட்டமும் டிரா ஆனது.