உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் ஏமாற்றம்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்து வருகிறது.;
ஜாக்ரெப்,
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்திய வீரர் சுஜீத் கல்கல் 5-6 என்ற புள்ளி கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரகுமான் மூசா அம்ஜோத் கலிலிடம் (ஈரான்) போராடி தோற்றார்.
இதில் நடைபெற்ற மற்ற எடைப்பிரிவு போட்டிகளிலும் இந்திய வீரர்களான விக்கி (97 கிலோ), நிஷூ (55 கிலோ), சரிகா (59 கிலோ) ஆகியோரும் ஏமாற்றம் அளித்தனர்.