சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.;

Update:2025-04-05 11:37 IST

சென்னை,

ஒருபுறம் கோடை வெயில் அதிகரித்து காணப்படும் நிலையில், மறுபுறம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நந்தனம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராம், வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகத்துக்கு செல்வோர் அவதியடைந்தனர். அத்துடன், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஐபிஎல் போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற அச்சமும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்