கும்பம் - வார பலன்கள்
அவிட்டம் 3,4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதங்கள்
சிந்தனையில் தெளிவு கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் முன்பாக ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செய்யுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆதரவுடன், பல நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த அலுவலகக் கடன் வந்து சேரும். சொந்தத்தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் பாராட்டுகளைப் பெறுவர். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் நன்கு நடைபெறும். லாபம் கூடுதலாகும். புதிய நண்பர்கள் வருகை பலன் தரும். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களில் இருந்து கிடைத்த ஒப்பந்தங்களில் மகிழ்வாக பணிபுரிவார்கள். புகழும், பொருளும் அதிகமாகும். குடும்பம் சீராக நடைபெறும். தொல்லைகள் காணப்பட்டாலும், பாதிப்புகள் இருக்காது. பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். பெண்களிடையே மனக்கசப்பு தோன்றி மறையும்.
பரிகாரம்:- குருபகவானுக்கு வியாழக்கிழமை நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு செல்வம் வந்து சேரும்.