சிம்மம் - வார பலன்கள்
அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரம் இது. திட்டமிட்ட பயணத்தை ஒத்திவைக்கும்படி நேரக்கூடும். உத்தியோகஸ்தர்கள் கடமைகளில் கவனமாக இருங்கள். புதிய பொறுப்புகளினால் வேலை அதிகரிக்கும். மற்றவர்களின் செயல் எரிச்சல் தரும். சொந்தத்தொழிலில் வருமானம் தாமதமாகும். நவீனக் கருவிகள் வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் வருமானம் சுமாராகக் காணப்படும். நிலுவையை வசூலிப்பதில் கவனம் தேவை. குடும்பம் நன்றாக நடந்தாலும், அவ்வப்போது சிறுசிறு பிரச் சினைகளும் காணப்படும். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். நண்பர்கள், சுபகாரியங்கள் நடைபெற சிறு தடை இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். பங்குச்சந்தையில் எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கும். இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலையிட்டு விளக்கேற்றி வலம் வருவது நல்ல திருப்பத்தை தரும்.