சிம்மம் - வார பலன்கள்
மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்
அரிய செயல்களை நுண்ணறிவுடன் செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!
முயற்சிகள் பலவற்றில் வெற்றியடைவீர்கள். எதிர்பார்க்கும் வரவுகள் தாமதமாகும். உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்கள் பற்றியோ, அலுவலகம் பற்றியோ வீணாகப் பேசி தொல்லைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். ஆவணங்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். சொந்தத்தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், தொழில் அபிவிருத்தி பற்றி பங்குதாரர்களிடம் ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சுமாரான லாபம் வந்து சேரும். கலைஞர்கள், சக நண்பர்கள் மூலம் பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகளைப் பெற முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கடன் பிரச்சினைகள் இருக்கும். அவற்றால் பெரிய பாதிப்பு எதுவும் வராமல் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.
பரிகாரம்:- சக்கரத்தாழ்வாரை புதன்கிழமை அன்று நெய் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் சங்கடங்கள் நீங்கும்.