சிம்மம் - வார பலன்கள்
அஞ்சாத நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் பயணங்களை தவிர்க்கவும். தகுந்த நபர்களின் உதவியுடன், செயல்களில் வெற்றி காண்பீர்கள். பண வரவு தாமதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், பொறுப்புகளால் வேலைப்பளு அதிகரிக்கலாம். சொந்தத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். வேலையை முடிக்க வாடிக்கையாளர் களிடம் இருந்து நெருக்கடி வரலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள், சுமாரான வருவாய் ஈட்டுவர். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிக லாபம் பெற, அன்றாட நிலவரங்களைக் கவனிப்பது நல்ல பலன் தரும். கலைஞர்கள், சக நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்பு களைப் பெற முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பச் செலவு அதிகரித்து தொல்லை கொடுக்கலாம். பெண்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
பரிகாரம்:- சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய் தீபமிட்டு வழிபடுவது சிறந்த பலன்களை அளிக்கும்.