சிம்மம் - வார பலன்கள்
கலைகளில் நாட்டம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
தொல்லைகளும், நன்மைகளும் கலந்தே காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்காவிட்டாலும், அதற்கு இணையான பல நன்மைகள் கிடைக்கப்பெறும்.
தொழில் துறையில் இருப்பவர்கள், ஓரளவு வளர்ச்சியைக் காண்பார்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது மிகவும் அவசியம். வேலைப்பளு அதிகரித்தாலும், அதற்கேற்ற வருவாய் வந்துசேரும். கூட்டுத்தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். கூட்டாளிகளின் விஷயத்தில் தாராள போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்.
மாணவர்களின் போக்கில் சிறிது மாறுதல் காணப்படும். கலைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வராது. பெண்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தில் குதூகலத்திற்கு குறைவிருக்காது.
பரிகாரம்:- திங்கட்கிழமை சிவபெருமானுக்கு வில்வ மாலை சூட்டி வழிபட்டால் மனக்கசப்பு நீங்கும்.