சிம்மம் - வார பலன்கள்
30.12.2022 முதல் 5.1.2023 வரை
தன் வேலையை தானே செய்து கொள்ளும் சிம்ம ராசி அன்பர்களே!
வெள்ளி முதல் சனிக்கிழமை மாலை 5.09 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில வேலைகள் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை தராது. பேச்சுவார்த்தையில் நிதானப் போக்கைக் கடைப்பிடிப்பது அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், வேலைகளில் அதிகக் கவனமாக ஈடுபடுவது அவசியம். மறதியால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். முக்கிய ஆவணங்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர் ஒருவர் புதிய நபரை அறிமுகப்படுத்துவார். கூட்டுத் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். லாபத்தால் கூட்டாளிகள் திருப்தி அடைவர்.
குடும்பம் சீராக நடந்து வந்தாலும், சிறு சிறு பிரச்சினைகளும் இருக்கலாம். கலைஞர்கள், பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் பணியாற்றுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் எதிர்பார்க்கும் லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
பரிகாரம்:- சனி பகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடுவது நல்ல பலனைத் தரும்.