சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
தினத்தந்தி 10 Feb 2023 12:48 AM IST (Updated: 10 Feb 2023 12:49 AM IST)
t-max-icont-min-icon

திறமையுடன் செயலாற்றும் திறன் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

நீண்ட காலமாகத் தடைபட்டிருந்த செயல்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய வேலை ஒன்றில், புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.

சொந்தத் தொழிலில் திடீர் மாற்றங்களைச் சந்திப்பீர்கள். முக்கிய வாடிக்கையாளருக்கு பரபரப்பாகவும், விரைவாகவும் செயல்பட்டு, வேலையொன்றை முடித்துக் கொடுப்பீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்கு நடைபெற்று, எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். போட்டிகளை முறியடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் வந்துசேரும். தினசரிகளில் வரும் அன்றாட நிலவரங்களை கவனித்து வருவது லாபத்தை இரட்டிப்பாக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள். பணச்சேர்க்கையால் சேமிப்பு அதிகமாகலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முற்படுவீர்கள்.

பரிகாரம்:- புத பகவானுக்கு புதன்கிழமை நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றிகள் தொடரும்.


Next Story