ஹோண்டா சி.டி. 110 டீலக்ஸ் அறிமுகம்


ஹோண்டா சி.டி. 110 டீலக்ஸ் அறிமுகம்
x

இருசக்கர வாகனத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஹோண்டா நிறுவனம் சி.டி. 110 டிரீம் டீலக்ஸ் என்ற பெயரில் புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. சவுகரியமான பயணம், நம்பகமான செயல்பாடுகளை ஒருங்கே கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏ.சி.ஜி. ஸ்டார்ட்டர் மோட்டார் உள்ளது. இது வாகனம் அதிர்வின்றி ஸ்டார்ட் ஆக உதவுவதோடு, பேட்டரி சார்ஜ் ஆவதற்கும் பயன்படுகிறது.

இதில் பி.ஜி.எம். எப்.ஐ. பியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிஸ்டன் கூலிங் ஜெட் உள்ளதால் என்ஜின் செயல்பாடு மேம்படுவதோடு எரிபொருள் சிக்கனமாக செலவாகும். இதில் டியூப்லெஸ் டயர் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

கருப்பு-சிவப்பு, கருப்பு-நீலம், கருப்பு-பச்சை, கருப்பு-கிரே உள்ளிட்ட இரட்டை நிறங்களில் கிடைக்கும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.73,400.


Next Story