நியூ ஏதெர் 450 எஸ், ஏதெர் 450 எக்ஸ் அறிமுகம்


நியூ ஏதெர் 450 எஸ், ஏதெர் 450 எக்ஸ் அறிமுகம்
x

பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஏதெர் எனெர்ஜி நிறுவனம் புதிதாக ஏதெர் 450 எஸ் மற்றும் ஏதெர் 450 எக்ஸ் என்ற பெயரில் இரண்டு ஸ்கூட்டர்களை அறிமுகம் செய் துள்ளது. 450 எஸ் மாடல் ஸ்கூட்டரில் 2.9 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 115 கி.மீ. தூரம் வரை ஓடும். இதில் 7.24 பி.ஹெச்.பி. திறன் கொண்ட 22 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப் படுத்தும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது ஸ்டார்ட் செய்த 3.9 விநாடிகளில் 40 கி.மீ. வேகத்தை எட்ட உதவும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கி.மீ. இதன் முன்புறத்தில் டீப்வியூ டி.எப்.டி. திரை உள்ளது. வாகனம் ஓட்டுபவர் கீழே விழுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டால் மோட்டார் இயக்கத்தை தானாக நிறுத்திவிடும் சென்சார் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது. ஆபத்து கால சிக்னல் வசதியும் இதில் உள்ளது. 450 எக்ஸ் மாடலில் 2.9 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது.

ஏதெர் எஸ் மாடலின் விற்பனையக விலை ரூ. 1.30 லட்சம்.

ஏதெர் 450 எக்ஸ் மாடல் விலை சுமார் ரூ.1.38 லட்சம்.


Next Story