கிழக்கில் இருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை ஒரே பான் இந்தியா கட்சி பாஜக - பிரதமர் மோடி


கிழக்கில் இருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை  ஒரே பான் இந்தியா கட்சி பாஜக - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 28 March 2023 9:44 PM IST (Updated: 28 March 2023 9:46 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பாஜக அலுவலகத்தில் புதிய அரங்கத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

கிழக்கில் இருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை என விரிந்துள்ள ஒரே பான் இந்தியா கட்சி பாஜக தான். 2 மக்களவைத்தொகுதிகளுடன் தொடங்கிய பயணம் தற்போது 303 இடங்களை எட்டியிருக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.

மேலும் கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நாம் இவ்வளவு செய்கிறோம் என்றால் சிலர் கோபம், ஏமாற்றம் அடைகின்றனர். ஆனால் அவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாது என்றார்.


Next Story