2வது நாளாக இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவு
வாரத்தின் 2வது நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்தது.
மும்பை,
2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது.
இதையடுத்து, பங்குச்சந்தை சரிவில் இருந்து மெல்ல மீளத்தொடங்கியது. அதன்படி, கடந்த 25ம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்பெற தொடங்கியது. அந்த வகையில் இந்திய பங்கு சந்தை கடந்த 1ம் தேதி புதிய உச்சம் தொட்டது. இதற்கிடையே நேற்று இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில், வாரத்தின் 2வது நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது. நிப்டி, பேங்க் நிப்டி உள்ளிட்ட அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே வர்த்தகத்தை தொடங்கின.
தற்போதைய நிலவரப்படி, நிப்டி சுமார் 63.05 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 23,992.55 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது. பேங்க் நிப்டி சுமார் 343.80 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 49,748.30 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது.
அதேபோல 166.33 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 78,593.07 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது மொத்த வணிகத்தில் 0.21 சதவீத சரிவாகும். நேற்றைய பங்குச்சந்தையின் சரிவுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் மோசமில்லை என்றாலும், சென்செக்ஸ் பட்டியலில் 18 நிறுவனத்தின் பங்குகள் இன்று சரிவுடனே இருந்தன.