“மூடி மறைத்து திருமணம்? அந்த எண்ணமே இல்லை” - மெஹரின் பிர்சாடாவின் காட்டமான பதில்

மெஹரின் பிர்சாடா தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் காட்டுத்தீயாக பரவியது.
சென்னை,
‘நெஞ்சில் துணிவிருந்தால்', ‘பட்டாஸ்', ‘இந்திரா' போன்ற படங்களில் நடித்தவர் மெஹரின் பிர்சாடா. தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.
இதற்கிடையில் மெஹரின் பிர்சாடா தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு விட்டார் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவியது. திரையுலகிலும் இது பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து அவர் காட்டமாக விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "முட்டாள்தனமாக சிலர் இது போன்ற வதந்திகளை பரவ செய்து விட்டார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. தற்போது வரை நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன்.
திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இருந்தால் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் அதை தெரிவிப்பேன். இப்படி மூடி மறைத்து ரகசியமாக செய்து கொள்ள மாட்டேன். அப்படிப்பட்ட எண்ணமும் எனக்கு இல்லை. மோசமான பேர்வழிகளை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இப்படிப்பட்ட வதந்திகளை நம்பாதீர்கள் என்று மட்டும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்", என்று குறிப்பிட்டுள்ளார்.






