இந்த ஆண்டின் முதல் ரூ.1,000 கோடி படம்...சாதனை படைத்த 'துரந்தர்'


Dhurandhar crossed Rs. 100 crore collection worldwide
x
தினத்தந்தி 26 Dec 2025 5:23 PM IST (Updated: 26 Dec 2025 5:37 PM IST)
t-max-icont-min-icon

’துரந்தர்’ படம் 21 நாட்களில் உலகளவில் ரூ.1,000 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னை,

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘துரந்தர்’. 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக நடித்து கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் இதில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.

’துரந்தர்’ படம் இந்து - முஸ்லிம் பிரச்சினை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் அரபு நாடுகள் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன. இருப்பினும், வசூலில் வேகம் குறையாமல் ’துரந்தர்’ வலம் வருகிறது.

’துரந்தர்’ படம் 21 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.668 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் ரூ.1,000 கோடி வசூலித்த ஒரே இந்திய படம் என்ற சாதனை ’துரந்தர்’ படைத்துள்ளது.

1 More update

Next Story