பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்


பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்
x
தினத்தந்தி 4 Dec 2025 7:49 AM IST (Updated: 4 Dec 2025 11:13 AM IST)
t-max-icont-min-icon

உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.

சென்னை,

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.

சிறிது காலமாக வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். இவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள 3 வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அந்த நிறுவனத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

1 More update

Next Story