'இறுகப்பற்று' நடிகை அபர்ணதியின் 'நாற்கரப்போர்' - டீசர் வெளியீடு

'இறுகப்பற்று' பட நடிகை அபர்ணதி நடித்த 'நாற்கரப்போர்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
'இறுகப்பற்று' நடிகை அபர்ணதியின் 'நாற்கரப்போர்' - டீசர் வெளியீடு
Published on

சென்னை

சின்னத்திரையில் `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து `தேன்', `ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த இரண்டு படங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றார்.

இதையடுத்து அபர்ணதி `இறுகப்பற்று' படத்தில் கடைசியாக நடிந்திருந்தார். தற்போது இவர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் நடிகையாக 'நாற்கரப்போர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த பதிவு ஒன்றை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். அதில் 'விளையாட்டினை மையப்படுத்திய உணர்ச்சிகரமான இந்த படத்தின் டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி' என்று பதிவிட்டுள்ளார். நாட்டில் துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com