’டான் 3’ படத்திலிருந்து விலகினரா ரன்வீர் சிங்?


is RANVEER SINGH QUITS DON 3!
x

ரன்வீர் சிங் விலகி உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

’டான் 3’ பட அப்டேட்டுக்காக நாடு முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் கிரித்தி சனோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், ரன்வீர் சிங் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை பற்றிய எந்த அப்டேட்டும் வெகு காலமாக வெளியாகாதநிலையில், ரன்வீர் சிங் விலகி உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் இயக்குநர் சந்திரா பரோட் இயக்கத்தில் 1978-ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் 'டான்' திரைப்படம் ரிலீசானது. இந்தப் படம் ரஜினி நடிப்பில் 'பில்லா' என்று தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன் பின்னர் இந்தியில் ஷாருக்கானை வைத்து 2006-ல் 'டான்' படத்தின் முதல் பாகத்தையும், 2011- ல் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் பர்ஹான் அக்தர் இயக்கி இருந்தார்.

1 More update

Next Story