" தமிழினி" திரைப்படத்தின் டைட்டில் அறிமுக விழா
" தமிழினி" திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை மற்றும் டைட்டில் அறிமுக விழா நேற்று திசையன்விளையில் நடந்தது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த இயக்குனர் கணேஷ் மூர்த்தி இயக்கத்தில் டிபி சரவணன் தயாரிப்பில் வெளியான பனையேறி குறும்படம் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று முதல் இடத்தை வென்றது.
இதன் காரணமாக இப்பட குழுவிற்கு பெயரும் புகழும் கிடைத்தது. இதன் மூலம் அந்த படக்குழுவின் தயாரிப்பாளர் சரவணன் சபரி சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி தனது நண்பரின் தேவா பிலிம்ஸ் உடன் இணைந்து நெய்தல் குடிமக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் தமிழினி என்ற படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
இத் திரைப்படத்தை பனையேறி குறும்படத்தை இயக்கிய கணேஷ் மூர்த்தி இயக்குகிறார். திரைப்படத்தின் ஹீரோவாக தனியார் மீடியாவில் விஜே வாக பணியாற்றிய ஆஷிக் நடிக்கிறார்.மற்றொரு ஹீரோவாக "என்னங்க சார் உங்க சட்டம்" திரைப்பட நடிகர் சாய் தினேஷ் நடிக்கிறார்.
படத்தின் ஹீரோயினாக கேரள திரைப்பட நடிகை "வெல்கம் டு பாண்டி மாலா" புகழ் கிருபா சேகரும், இரண்டாவது ஹீரோயினாக "ரத்னம்" திரைப்பட நடிகை சாஷா நடிக்கின்றனர்.
திசையன்விளையில் நடைபெற்ற தமிழினி திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை மற்றும் டைட்டில் அறிமுக விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.