“பராசக்தி” படத்தின் “அடி அலையே” வீடியோ பாடல் வெளியானது


சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் முதல் வாரத்தில் ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’ . சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உடன் அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய இசையில் 100வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.

1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது. ‘பராசக்தி’ திரைப்படம் முதல் வாரத்தில் ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் ‘அடி அலையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story