ரூ.358 கோடி மதிப்புள்ள வைரநகையுடன் பிரியங்கா சோப்ரா
ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.358 கோடி மதிப்புள்ள வைரநகையை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ரோமானிய பெரிய நகைக் கடையான பல்கேரியின் 140-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இத்தாலியில் உள்ள இந்த நகைக்கடை வாட்சுகள், வாசனை திரவியங்கள், தோல் பொருட்கள் விற்பனையில் புகழ் பெற்றது.
இந்த விழாவில் பல்கேரிய நகைக் கடையின் உலகளாவிய தூதராக உள்ள பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இவர் ரூ. 358 கோடி மதிப்பிலான வைரநகை அணிந்து அசத்தியிருக்கிறார். இந்த நகையை 140 காரட் வைரங்களைக் கொண்டு சுமார் 2800 மணி நேரம் செலவழித்து வடிவமைத்து இருக்கிறார்கள். விழாவில் பிரியங்காவின் நகைதான் அனைவரது கண்களையும் பறித்திருக்கிறது.
இந்த நிகழ்வில் பிரியங்காவுடன் ஹாலிவுட் நடிகைகளும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலர் நிக் ஜோன்ஸ் உடனான திருமணத்திற்குப் பிறகு ஹாலிவுட்டிலும் படங்கள் நடித்து வருகிறார். 'மேட்ரிக்ஸ்4' படத்தை அடுத்து பிரியங்கா சோப்ரா 'ஹெட் ஆப் ஸ்டேட்ஸ்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.