சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்

சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வரும் 20ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Published on

சென்னை,

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ளார். இப்படத்திற்கு 'ப்ரீடம் ஆகஸ்ட் - 14' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். சிநேகன், மோகன் ராஜா பாடல்களை எழுதுகின்றனர். படம் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

விஜய கணபதி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஆயுதபூஜையை முன்னிட்டு சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.

தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வது போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இயக்குநரான சசிகுமார் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கருடன் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக உருவான இதில் கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரீடம் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வரும் 20ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com