சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்கும் தெலுங்கு நடிகை

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை பரியா அப்துல்லா நடிக்க உள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இதற்கு முன் இவர் சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது லைகா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். இதில், நடிகராக சந்தீப் கிஷன் நடிக்கிறார். எஸ்.தமன் இசையை மேற்கொள்கிறார். கடந்த பல மாதங்களாக இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தநிலையில், படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. மேலும், முதற்கட்டமாக சந்தீப் கிஷன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை பரியா அப்துல்லா ஒப்பந்தமாகி உள்ளார். இவர் விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் தெலுங்கில் 'ஜதி ரத்னலு, ராவண சூரா' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.