’அதனால்தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை’ - பிரபாஸ்


Thats why I havent gotten married yet, - Prabhas
x

நேற்று ’தி ராஜா சாப்’படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது.

சென்னை,

இந்திய அளவில் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்து ’தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. மற்ற மொழிகளில் 9-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தொகுப்பாளினி, பிரபாஸிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்டார். ஒரு ரசிகர், “பிரபாஸை மணக்க விரும்பினால் எப்படி இருக்க வேண்டும்?” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையைக் காட்டினார். அவர் அதே கேள்வியை பிரபாஸிடம் கேட்டார். அதற்கு பிரபாஸ் ஒரு அதிர்ச்சியூட்டும் பதிலைக் கொடுத்தார். “அந்த உண்மை தெரியாமல்தான் நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்று கூறினார்.

1 More update

Next Story