'வேர்ல்ட் ஆப் பராசக்தி' - வைரலாகும் புது வீடியோ


World of Parasakthi - A new video goes viral
x
தினத்தந்தி 28 Dec 2025 6:07 PM IST (Updated: 28 Dec 2025 9:44 PM IST)
t-max-icont-min-icon

இப்படம், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'வேர்ல்ட் ஆப் பராசக்தி' என்ற தலைப்பில் ஒரு புது வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

1 More update

Next Story