’காட்டான்’ முதல் ’ஹார்ட் பீட் சீசன் 3’ வரை...ஜியோ ஹாட்ஸ்டாரின் புதிய அறிவிப்புகள்


Kaattaan glimpse: Fierce Vijay Sethupathi slashes a mans throat in new show
x

ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் வெப் தொடர்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, மோகன்லால், நாகர்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் தமிழில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் வெப் தொடர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காட்டான்’, யோகிபாபு ’கெனத்த காணோம்’, கதிர் நடிக்கும் ‘லிங்கம்’, பிரியாமணி, ஆரி நடிக்கும் ‘குட் வைஃப்’ சீசன் 2, தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஹார்ட்பீட்’ வெப் தொடரின் சீசன் 3, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘லக்கி தி சூப்பர்ஸ்டார்’, எருமசாணி விஜய் குமார் நடிக்கும் ‘ரிசார்ட்’, கவுரி கிஷன் நடிக்கும் ‘லவ் ஆல்வேஸ்’ உள்ளிட்ட தொடர்கள், படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இது மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு படங்கள் குறித்த அறிவிப்பையும் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டது. ஆனால் அவற்றின் ரிலீஸ் தேதிகள் குறித்து எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story