ஓ.டி.டி.யில் வெளியாகும் நகுலின் 'வாஸ்கோடகாமா'

நகுலின்'வாஸ்கோடகாமா' படம் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் நகுலின் 'வாஸ்கோடகாமா'
Published on

சென்னை,

நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல், சங்கர் இயக்கிய 'பாய்ஸ் 'படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 -ம் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' படத்தில் நகுல் நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தேதி எதுவும் குறிப்பிடாமல் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com