ரூ.34 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ரூ.34 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:03 AM IST (Updated: 4 July 2023 11:56 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று 1,800 மூட்டை பருத்தி ரூ.34 லட்சத்துக்கு ஏலம் போனது.

நாமக்கல்

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 1,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

ரூ.34 லட்சத்துக்கு விற்பனை

ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 300 முதல் ரூ.7 ஆயிரத்து 100 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 300 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 1,800 பருத்தி மூட்டைகள் ரூ.34 லட்சத்துக்கு விற்பனையானது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.


Next Story