பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
தினத்தந்தி புகாா் பெட்டி
வீணாகும் தண்ணீர்
கொடுமுடியில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வீணாக செல்கிறது. சில நாட்களாகவே இந்த நிலை தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் இனியாவது இதை சரிசெய்வார்களா?
பொதுமக்கள். கொடுமுடி
வழிகாட்டி பலகை
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லக்காபுரம் ஊராட்சி ஈரோடு-முத்தூர் ரோட்டில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக பெயர் பலகைகளை அதிகாரிகள் பெயர்த்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி வழி மாறி செல்லும் நிலை உள்ளது. எனவே பெயர்த்து எடுத்த வழிகாட்டி பலகைகளை மீண்டும் நெடுஞ்சாலை ஓரம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
ரவி, மொடக்குறிச்சி
தேங்கும் கழிவுநீர்
டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தில் காட்டுவலவு பகுதியில் சாக்கடை வடிகால் இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை. இதனால் பணி பாதியில் நிற்கிறது. இதன் காரணமாக சாக்கடையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொண்டையம்பாளையம்
நாய்கள் தொல்லை
ஈரோடு நாடாா்மேடு கெட்டி நகாில் உள்ள விநாயகா் கோவில் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. வாகனங்களில் செல்பா்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் குரைத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால் தூங்க முடியாமல் அவதிப்படுகிறோம். ஆகவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகமது, நாடாா்மேடு,
குவிந்துள்ள குப்பைகள்
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் உள்ள எஸ்.பி.நகரில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி
ஆபத்தான மின் ஒயர்கள்
பவானி அந்தியூர் பிரிவு சாலையில் பவானி நகராட்சியின் பராமரிப்பின் கீழ் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மின்விளக்கின் பயன்பாட்டுக்காக உள்ள ஒயர்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, பராமரிப்பின்றி உள்ள மின் ஒயர்களை சரி செய்ய வேண்டும்.
ஜான், பவானி.
பாராட்டு
டி.என்.பாளையம் அருகே உள்ள புஞ்சைத்துறையம்பாளையம் தேவாலயம் வீதியில் உள்ள மின்கம்பத்தை செடி, கொடிகள் சூழ்ந்திருந்தது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மின்கம்பத்தில் சூழ்ந்த செடி கொடிகள் அகற்றப்பட்டது. எனவே பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புஞ்சைத்துறையம்பாளையம்
---------------