ஆண்டாளுக்கு அண்ணனான ராமானுஜர்

தனக்கான வேண்டுதலை நிறை வேற்றிய ராமானுஜரை, 'அண்ணனே..' என்று அழைத்ததாக தல வரலாறு சொல்கிறது.
கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய ராமானுஜர், அந்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு திருவில்லிபுத்தூரில் கோவில் கொண்டிருந்த ஆண்டாளை பார்ப்பதற்காகச் சென்றார். ஆனால் வயது வித்தியாசம் பார்க்காத ஆண்டாள், தனக்கான வேண்டுதலை நிறை வேற்றிய ராமானுஜரை, 'அண்ணனே..' என்று அழைத்ததாக தல வரலாறு சொல்கிறது. ஒரு பெண்ணின் மனதில் உள்ள விஷயங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, அவளது தந்தைக்கு உண்டு. அதன்பிறகு அந்தப் பொறுப்பு அவளது அண்ணனுக்கு உரியது. அதனால்தான் ராமானுஜரை, ஆண்டாள் நாச்சியார் 'அண்ணனே' என்று அழைத்திருக்கிறார்.
அன்று முதல் திருப்பாவையின் 27-ம் நாள் பாசுரத்தில் 'பால் சோறு மூட நெய் பெய்து.. என்று இருப்பதால், அக்காரவடிசலான பால்சோறு, நூறு அண்டாக்களில் சமர்ப்பிக்கும் வழக்கம், இன்றைக் கும் அழகர்மலையில் உள்ள கள்ளழகர் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. இது பிற்காலத்தில் பிற வைணவ ஆலயங்களிலும் செய்யும் ஒரு நடைமுறை வழக்கமாக மாறிப்போனது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், கள்ளழகர் ஆலயங்களில் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்த வைபவத்தின் போது, 120 லிட்டர் பால், 250 கிலோ அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை சேர்த்து, பலமணி நேரம் சுண்டக்காய்ச்சி தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் கள்லழகருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.






