வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' படிப்புகள் - முழு விவரம்
வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் கிளவுட் கம்ப்யூட்டிங் படிப்புகள் தொடர்பான முழு விவரத்தை காண்போம்.
இன்றைய உலகில் "கிளவுட் கம்ப்யூட்டிங்" எனப்படும் "மேகக்கணினி" என்பது மிக வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பமாகும். இதனை "மேகக் கணிமை" என்றும் அழைப்பார்கள்.
ஆரம்பகாலங்களில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மென்பொருளை (SOFTWARE) தரவிறக்கம் (DOWNLOAD) செய்து, அதனை தங்களது நிறுவன கம்ப்யூட்டர்களில் அல்லது சேமிப்பான்களில் (SERVER) சேமித்து வைத்தார்கள்.
ஆனால், தற்போது, ஏதாவது ஒரு இடத்தில் இணையதளம் மூலம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை உலகில் எந்த இடத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளும் வசதிகளும், வாய்ப்புகளும் உருவாகிவிட்டன. இதுவே "கிளவுட் கம்ப்யூட்டிங்" என்பதாகும்.
இணையதளத்தின் அடிப்படையில் பெறப்படும் தகவல்களை சேகரித்து, ஓரிடத்தில் வைக்கப்பட்ட தகவல்களை தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்தும் தொழில்நுட்பம் இன்று "கிளவுட் கம்ப்யூட்டிங்" என பெயர் பெற்றுள்ளது.
குறிப்பாக - இணையத்தில் சர்வர்கள், சேமிப்பு, தரவுத்தளங்கள், நெட்வொர்க்கிங் மென்பொருள், பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு போன்ற பல கம்ப்யூட்டர் சேவைகளை வழங்குவதற்கு இது மிகவும் கிளவுட் கம்ப்யூட்டிங் மிகவும் உதவியாக அமைகிறது.
கிளவுட் கம்ப்யூட்டிங் வசதிகள்கொண்ட நிறுவனங்கள் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள், தகவல்கள் மற்றும் தரவுகள் (DATA), ஆகியவற்றை தங்கள் நிறுவன கம்பியூட்டர்களிலும், சாப்ட்வர் எனப்படும் மென்பொருட்களிலும் நாள்தோறும் சேமிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களிடமிருந்து தேவையான தகவல்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை உரிய கட்டணங்கள் செலுத்தி மற்ற அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் தேவையானபோது பெற்றுக்கொள்ளலாம்.
"கிளவுட் கம்ப்யூட்டிங்" படிப்புகள்
"கிளவுட் கம்ப்யூட்டிங்" சம்பந்தமாக ஏராளமான புதிய படிப்புகள் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள்மூலம் உலகெங்கும் நடத்தப்படுகிறது.
1. Executive Post Graduate Certification in Cloud Computing and DevOps
2. Cloud and DevOps Course
3. Advanced Certification in DevOps and Cloud Computing
4. Advanced Certification in Cloud Computing and DevOps
5. Advanced Certification in Cloud Azure and DevOps
6. Cloud Foundations
7. Cloud Computing Foundation
8. Cloud Service Providers
9. Cloud Computing Architecture
10. Cloud Computing Service Models
11. IaaS for Cloud Computing
12. PaaS for Cloud Computing
13. SaaS in Cloud Computing
14. Virtual Cloud Computing
15. AWS For Beginners
16. Managing Change when Moving to Google Cloud
யாரெல்லாம் படிக்கலாம்…?
கிளவுட் கம்ப்யூட்டிங் சம்பந்தப்பட்ட படிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்ந்து படிக்கலாம். குறிப்பாக – சாப்ட்வர் டெவெலப்பர்ஸ் (SOFTWARE DEVELOPERS), சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர்ஸ் (SYSTEM ADMINISTRATORS) மற்றும் பிசினஸ் அனாலிசிஸ் (BUSINESS ANALYSIS) பதவி வகிப்பவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் கிளவுட் கம்பியூட்டிங் சான்றிதழ் படிப்புகள் மிகவும் உதவியாக அமையும்.
வேலைவழங்கும் நிறுவனங்கள்
கிளவுட் கம்ப்யூட்டிங் படிப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமேசான், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், அக்ஸ்சென்ர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்.சி.எல்.டெக், ஐபிஎம் போன்ற உலக அளவில் பிரபலமான நிறுவனங்கள் உடனடி வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
என்னென்ன பதவிகள்?
கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஒருவரது கல்வித்தகுதி, சிறப்புத்திறன், பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படுகின்றன.
கிளவுட் கம்ப்யூட்டிங் துறையிலுள்ள பதவிகள் பின்வருமாறு:
* கிளவுட் அன்மினிஸ்டிரேட்டர்; (Cloud Administrator)
* கிளவுட் சப்போர்ட் இன்ஜினியர்; (Cloud Support Engineer)
* கிளவுட் செக்யூரிட்டி அனலிஸ்ட் (Cloud Security Analyst)
* கிளவுட் நெட்வொர்க் இன்ஜினியர்; ( (Cloud Network Engineer)
* கிளவுட் சப்ட்வேர் இன்ஜினியர்; (Cloud Software Engineer)
* கிளவுட் ஆட்டோமேஷன் இன்ஜினியர்; (Cloud Automation Engineer)
* கிளவுட் இன்ஜினியர்; (Cloud Engineer)
* கிளவுட் கன்சல்டன்ட் (Cloud Consultant)
* கிளவுட் டேட்டா சயின்டிஸ்ட் (Cloud Data Scientist)
* கிளவுட் ஆர்க்கிடெக்ட் (Cloud Architect)
* கிளவுட் நெட்வொர்க் இன்ஜினியர்; (Cloud Network Engineer)
* சிஸ்டம்ஸ் அட்மினிஸ்டிரேட்டர்; (Systems Administrator)
* பேக் என்ட் டெவலெப்பர்; (Back-End Developer)
* ஜாவா கிளவுட் டெவலெப்பர் (Java Cloud Developer)
* புல் ஸ்டேக் டெவலெப்பர்; (Full-Stack Developer)
* பிரன்ட் என்ட் டெவலெப்பர்; (Front-End Developer)
* டெவலெப்மென்ட் ஆப்பரேஷன்ஸ் இன்ஜினியர்;(Development Operations Engineer)
* செக்யூரிட்டி இன்ஜினியர்; (Security Engineer)
* பிளாட்பார்ம் இன்ஜினியர்; (Platform Engineer)
* டேட்டா இன்ஜினியர்; (Data Engineer)
* கிளவுட் ஆப்பரேஷன் மேனேஜர்; (Cloud Operation Manager)
* கிளவுட் சொலுசன்ஸ் ஆர்க்கிடெக்ட் (Cloud Solutions Architect)
* கிளவுட் செக்யூரிட்டி இன்ஜினியர்; (Cloud Security Engineer)
கிளவுட் கம்ப்யூட்டிங் நன்மைகள்
கிளவுட் கம்ப்யூட்டிங் பல்வேறு வகையான நன்மைகளை நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் வழங்குகிறது. குறிப்பாக நிறுவனங்களில் தேவையற்ற செலவுகளை குறைக்க இது உதவுகிறது. குறைந்த மூலதனத்தில் நிறைந்த பலன் பெற இது உதவிகரமாக அமைகிறது. தேவையானபொழுது அவசியமான தகவல்களை பெற கிளவுட் கம்ப்யூட்டிங் அடிப்படையாக அமைகிறது. உலகில் எந்தப் பகுதியிலிருந்தும் அத்தியாவசியமான தரவுகளை பெறவும் இது வழிவகை செய்கிறது.
சேகரிக்கப்பட்ட பல்வேறு தகவல்களை பாதுகாப்பதற்கும், சேமித்த தகவல்களை உரிய நேரத்தில் பயன்படுத்துவதற்கும் உதவுகிறது. சரியானமுறையில் தகவல்தொடர்பை பயன்படுத்தவும், நிறுவனத்திலுள்ள மற்ற நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து செயல்படவும் இது பேரூதவியாக அமைகிறது.
நிறுவனங்களுக்குத் தேவையான தகவல்களை உரிய நேரத்தில் வழங்குவதன்மூலம் அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக கிளவுட் கம்ப்யூட்டிங் அமைவது குறிப்பிடத்தக்கதாகும்.