பிரதமர் மோடிக்கு தேவகவுடா பிறந்தநாள் வாழ்த்து


பிரதமர் மோடிக்கு தேவகவுடா பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 17 Sept 2024 3:03 PM IST (Updated: 17 Sept 2024 3:51 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடிக்கு தேவகவுடா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

குஜராத் முதல்-மந்திரியாக 4 முறை பதவி வகித்தவரும், நாட்டின் பிரதமராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் தனது மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியாவை வெற்றிகரமாக வழிநடத்த வலிமை கிடைக்கட்டும். மேலும் அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


Next Story