மேற்கு வங்காளத்தில் நிபா வைரசின் பரவல் அதிகரிப்பு; வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 120 பேர்


மேற்கு வங்காளத்தில் நிபா வைரசின் பரவல் அதிகரிப்பு; வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 120 பேர்
x
தினத்தந்தி 15 Jan 2026 2:48 PM IST (Updated: 15 Jan 2026 2:51 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர், நர்ஸ் மற்றும் சுகாதார ஊழியர் என 3 பேருக்கு நிபா வைரஸ் தொற்று இன்று உறுதியாகி உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கடந்த சில நாட்களாக நிபா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தொற்று உறுதியான 2 நர்சுகள் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், அதில் பலனில்லை. இதனால் அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஆண் நர்ஸ் ஒருவர், புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர். பெண் நர்ஸ் புர்பா பர்தமான் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

இவர்கள் தவிர, டாக்டர், நர்ஸ் மற்றும் சுகாதார ஊழியர் என 3 பேருக்கும் தொற்று இன்று உறுதியாகி உள்ளது. இதனால், மொத்தம் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், 120 பேருக்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கூறி மேற்கு வங்காள அரசு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

1 More update

Next Story