இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
x
தினத்தந்தி 6 May 2025 9:16 AM IST (Updated: 8 May 2025 7:03 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 6 May 2025 10:25 AM IST

    நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு நியமித்த விசாரணைக்குழு அறிக்கை வழங்கியது

    புதுடெல்லி,

    டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14-ந்தேதி கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் 3 ஐகோர்ட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தார். இந்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்தது. இந்த அறிக்கை நேற்று முன்தினம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் எடுக்கப்பட்ட பணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் விசாரணைக்குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

  • 6 May 2025 10:13 AM IST

    • மத்திய உள்துறை செயலர் தலைமையில் அவசர கூட்டம்
    • மே 7ம் தேதி நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தக்கூடிய நிலையில் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் தலைமையில் அவசர கூட்டம்
    • அவசர கூட்டத்தில், நாட்டின் 244 மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு உறுதி செய்யவுள்ளதாக தகவல்

  • 6 May 2025 9:46 AM IST

    கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

    • திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
    • ஹரிஹரன்(17), வெங்கட்ரமணன்(19), வீரராகவன்(24) ஆகிய மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
    • கோவில் குளத்தில் மூழ்கி தரிசனம் செய்ய முயன்ற நபர் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்ற முயன்ற 2 பேர் உட்பட 3பேர் உயிரிழப்பு

  • 6 May 2025 9:21 AM IST

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில்  எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் நேற்று இரவும் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. 12-வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறிய நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

1 More update

Next Story