காதலியை மணக்க இருந்த நாளில் வாலிபருக்கு நிகழ்ந்த சோகம்

மணக்கோலம் காணும் நேரத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் ,
செம்பழந்தி பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய ராகேஷ் மற்றும் காட்டாயிகோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, ராகேஷ், நேற்று காலை கோவிலில் காதலியை திருமணம் செய்து, பின்னர் வாடகை வீட்டில் புதிய வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டிருந்தார்
திருமண வேலைகளுக்காக நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் ராகேஷ் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கேரள அரசு மின்சார பஸ் மீது மோதி ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மணக்கோலம் காணும் நேரத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






