23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்


23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
தினத்தந்தி 23 Dec 2024 8:59 AM IST (Updated: 24 Dec 2024 8:11 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 23 Dec 2024 9:14 AM IST

    புதுமணத் தம்பதி கீர்த்தி சுரேஷ் - ஆண்டனிக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • 23 Dec 2024 9:08 AM IST

    அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிச. 27, 28ல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • 23 Dec 2024 9:07 AM IST

    டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மை இல்லை என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தி பங்கேற்றதால், இனி 2026-ம் ஆண்டு தான் கலந்து கொள்ள முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • 23 Dec 2024 9:06 AM IST

    அரசு பஸ் ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்த அனைத்து போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

  • 23 Dec 2024 9:04 AM IST

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

  • 23 Dec 2024 9:02 AM IST

    கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

    டெல்லியில் இன்று நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கர்தினால்கள், ஆயர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடனும் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.

  • சன்னி லியோன், ஜானி சின்ஸ்  பெயரில் மோசடி
    23 Dec 2024 9:01 AM IST

    சன்னி லியோன், ஜானி சின்ஸ் பெயரில் மோசடி

    சத்தீஷ்காரில் சன்னி லியோன் பெயரில் ஆன்லைன் கணக்கு தொடங்கி அரசின் திட்டங்களைப் பெற்று மோசடி நடந்துள்ளது. சத்தீஷ்கார் மாநில பாஜக அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 தொகையை பெறுவதற்கான அரசின் விண்ணப்பத்தில் சன்னி லியோன் - ஜானி சின்ஸ் தம்பதி என குறிப்பிட்டு தொகையை பெற்றுவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • 23 Dec 2024 9:00 AM IST

    குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றுவிட்டு மன்னார்குடிக்கு வந்து கொண்டிருந்த ரவிச்சந்திரன் என்பவரது கார் காளாஞ்சிமேடு சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story