பொங்கல் எதிரொலி... கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்


பொங்கல் எதிரொலி... கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்
x

கோயம்​பேட்டில் பொங்​கல் சிறப்பு சந்தை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை,

பொங்​கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்​டாடப்​பட​வுள்ள நிலை​யில், தேவை​யான பாரம்​பரியப் பொருட்​களை முன்​கூட்​டியே வாங்க பொது​மக்​கள் ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர். குறிப்​பாக கரும்​பு, மஞ்​சள் கொத்​து, இஞ்சி கொத்​து, வெல்​லம் போன்​றவை பண்டிகை​யின் முக்​கிய அடை​யாளங்​களாக இருப்​ப​தால், அவற்​றின் தேவை அதி​கரித்​துள்​ளது. இதையொட்டி கோயம்​பேடு சந்​தை​யில் விற்​பனை சூடு​பிடித்​துள்​ளது.

அந்த வகை​யில், கரும்​பு, வாழை, மஞ்​சள் கொத்​து, இஞ்​சி, வெல்​லம் போன்ற பிற பொங்​கல் பொருட்​களும் ஒரே இடத்​தில் கிடைக்​கும் வகை​யில் கோயம்​பேடு அங்​காடி நிர்​வாகம் சார்​பில் சுமார் 7 ஏக்​கர் பரப்​பள​வில் பொங்​கல் சிறப்பு சந்தை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

தொடர்ந்து மேலும் பல லாரி​களில் கரும்புகள் வந்த வண்​ணம் உள்​ளன. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்​டு, கரும்​பின் தரத்​தைப் பொறுத்து ரூ.300 முதல் ரூ.600 வரை விற்​பனை செய்​யப்​படு​கிறது. ஒருசிலர் ஒரு கட்டு ரூ.800 வரை​யிலும் விற்​பனை செய்​தனர். அதேபோல, மஞ்சள் குலை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story