விடுமுறை தினம்: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


விடுமுறை தினம்: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 21 Dec 2025 5:02 PM IST (Updated: 21 Dec 2025 5:03 PM IST)
t-max-icont-min-icon

குடும்பம் குடும்பமாக வருகை தந்து கடலில் குளித்து வருகின்றனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை கோவில், ஐந்தரதம் போன்ற புராதன பகுதிகள் நிரம்பி காணப்பட்டது. கடற்கரை பகுதியில் குடும்பம், குடும்பமாக குவிந்த சுற்றுலா பயணிகள், கடலில் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக தங்கள் பெற்றோருடன் குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர். கடற்ரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க ஏராளமான போலீசார் சாதாரண உடையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதை காண முடிந்தது.

பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் புராதன சின்னங்களை நோக்கி சென்றதை காண முடிந்தது.

1 More update

Next Story