`எத்தனை நாள் ஒளிவாரு, நேரம் வரும்’’- ஜாய் கிரிசில்டா


How long will you hide? The time will come, - Joy crizildaa
x

ஜாய் கிரிசில்டாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

சென்னை,

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதுதான் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் இதனை மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், இதனைநிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் ஜாய் கிரிசில்டாவின் சமீபத்திய இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.

``டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் வந்தாரா என பலரும் மெசேஜ் செய்கிறார்கள். அவர் எப்படி வருவார். அறிக்கை தான் விடுவார். ஓடி ஒளிய தான் முடியும். கோர்ட்டு ஆர்டர் கிட்ட ஒளிய முடியாது. எத்தனை நாள் ஒளிவாரு. நேரம் வரும்’’ என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story