லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் - அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்


லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் - அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்
x

எப்.சி கட்டண உயர்வு குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்தார்.

சென்னை,

வாகன எப்.சி கட்டண உயர்வை கண்டித்து டிசம்பர் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்.சி கட்டண உயர்வு குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராடும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.


1 More update

Next Story