பழனி முருகன் கோவிலில் ஒரேநாளில் ரூ. 75.53 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம் விற்பனை

முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது
திண்டுக்கல்
முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. பழனி முருகன் கோவிலில் தயாராகும் பஞ்சாமிர்தம் விற்பனைக்காக அடிவாரம், கிரிவீதிகள் என பல்வேறு இடங்களில் பஞ்சாமிர்த ‘ஸ்டால்கள்' அமைக்கப்பட்டுள்ளன.
பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஊருக்கு திரும்பும்போது கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தனித்த சுவை கொண்டது என்பதால் அதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , பழனி முருகன் கோவிலில் இன்று ஒரேநாளில் ரூ. 75.53 லட்சத்திற்கு பஞ்சமிர்தம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க பஞ்சாமிர்த தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






