ஊழல், பொய் வாக்குறுதிகளால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர் - அமித்ஷா

நாளை திருச்சியில் நடைபெறும் பொங்கல் விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார்.
திருச்சி,
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திருச்சி வந்தடைந்தார். அவரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் , மத்திய இணை மந்திரி எல்.முருகன் பாஜக, அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் வரவேற்றனர். இன்று காலை புதுக்கோட்டையில் நடைபெறும் நயினார் நாகேந்திரன் பிர்சார நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். நாளை திருச்சியில் நடைபெறும் பொங்கல் விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார்.
இந்தநிலையில் அமித்ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது. இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்றவுள்ளார் என அதில் பதிவிட்டுள்ளார்.






