உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் - இந்திய கம்யூ. கட்சி பாராட்டு


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் - இந்திய கம்யூ. கட்சி பாராட்டு
x

கோப்புப்படம் 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகிப்பது பாராட்டுக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பல்வேறு மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகமாக நடைபெறுகின்றன. 2025-ம் ஆண்டு தமிழகத்தில் 1,476 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. இதன் மூலம் பயனாளிகளுக்கு மறுவாழ்வு கிட்டியுள்ளது. தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகமாக நடைபெறுவதற்கு, தமிழ்நாடு மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருப்பதும், திறமையான மருத்துவர்கள் இருப்பதும், மருத்துவக் கட்டமைப்புகள் மேம்பட்டு இருப்பதும் முக்கியக் காரணங்களாகும்.

மூளைச்சாவுக்கு உள்ளானவர்களுடைய உடல் உறுப்புகளை, அவை தேவைப்படும் நோயாளிகளுக்கு கொடையாக வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் தமிழக மக்களிடம் மேலோங்கியுள்ளது. இதுவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகிப்பதற்கு காரணமாக உள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதற்கு அர்ப்பணிப்போடு செயல்படும், மருத்துவர்களுக்கும், மருத்துவக் குழுவினருக்கும், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story