டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தின விழா


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தின விழா
x

விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னை,

சென்னை அடுத்த புழலில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா சென்னை வாழ் நாடார்கள் சங்க செயலாளர் டாக்டர் சி. ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்றது பள்ளி முதல்வர் ராஜராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்றார் சென்னை நாடார்கள் சங்க தலைவர் டி. தங்கமுத்து பொதுச்செயலாளர், ஆர். செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சங்க துணை தலைவர் எல். தாமஸ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

விழாவில் சங்க முன்னாள் பொருளாளர் கேவிபி பூமிநாதன் முன்னாள் தலைவர் பி. சின்னமணி, துணை தலைவர்கள் ஏ. சிற்றம்பலம், எம். செந்தில், பொருளாளர் கே.எம். செல்லதுரை, அறக்கட்டளை செயலாளர் எம். சுந்தர், அறக்கட்டளை உறுப்பினர் எ. பழனிசாமி, நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், கே. பாலமுருகன், கல்வி குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாண்டியன், எம். இந்துநாதன், காந்திநகர் நாடார்கள் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் தனசேகரன், புழல் நாடார்கள் சங்க ஆலோசகர் எட்வின் ஞானசேகர், செங்குன்றம் சுற்று வட்டார நாடார்கள் சங்க பொருளாளர் டி. சர்வேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீ நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா சங்க துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் சங்க தலைவர் பி. சின்னமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் கல்லூரி முதல்வர் ஜான்சி ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story