‘தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது’ - மாணிக்கம் தாகூர் எம்.பி.


‘தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது’ - மாணிக்கம் தாகூர் எம்.பி.
x
தினத்தந்தி 26 Jan 2026 3:23 PM IST (Updated: 26 Jan 2026 3:43 PM IST)
t-max-icont-min-icon

தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. பதிவிட்டுள்ளார்.

மதுரை,

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகி கோ.தளபதி, “நாங்கள் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது” என்று பேசியதாக கூறப்படுகிறது. இதனை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புத் தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story